சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 11-வது உலகத் தமிழ் இணைய மாநாடு வருகிற டிச.28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் புதன்கிழமை செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில் 'அண்ணாமலைப்
பல்கலைக்கழக மொழியியல்துறை, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) ஆகியவை இணைந்து பல்கலைக்கழகத்தில் 11-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டினை வருகிற டிச.28 முதல் 30-ம் தேதி வரை நடத்துகிறது' என்றார்.பின்னர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் மு.மணிவண்ணன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழின் பயன்பாடுகள் தொடர்பாக உலகில் தமிழும், தொழில்நுட்பமும் தழைக்கும் பல நாடுகளில் செய்து வரும் ஆராய்ச்சிகள், பயன்பாடுகள் பலவற்றை உலகத் தமிழறிஞர்கள் கலந்து ஆய்வு செய்வதற்கும், தமிழர்களிடையே பரப்புவதற்கும் உலகத் தமிழ் இணைய மாநாடுகளை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதுவரை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட 7 நாடுகளில் முன்னணி பல்கலைக்கழகங்களோடு இணைந்து மாநாடு நடத்தியுள்ளோம். தமிழகத்தில் 3 மாநாடுகளை தமிழகஅரசு ஆதரவோடு நடத்தியுள்ளோம். தமிழ் தொடர்பான கணினி சார் மொழியியல் துரையில் குறிப்பிடதக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 11வது மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிதி உதவி வழங்கியுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய இயக்குநர் பேராசிரியர் மா.கணேசன் மாநாட்டின் உள்ளூர் குழுவிற்கு தலைமை வகிக்கிறார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் இந்தியா மற்றும் புயல் பெயர்ந்த தமிழர்கள் வாழும் அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேக்ந்த பேராளர்கள் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டின் மையக் கருத்தான இணையத்தின் மகிப்பெரும் நிறுவனங்களான கூகிள், பேஸ்புக் போன்றவற்றிற்கு செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் விளம்பர பரவலைகளை பற்றியும், அவை எவ்வாறு தமிழில் மின் வணிகத்தை வளர்க்க வாய்ப்பளிக்கும் என்பது பற்றி அடோபி நிறுவன சென்னை மையத் தலைவர் மோகன் கோபாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
மாநாட்டை முன்னிட்டு கண்காட்சி, மக்கள் கூடம், கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது. மாநாட்டில் உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களிடமிருந்து 119 ஆயுவ் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளன. இதில் 53 கட்டுரைகள் தொழில்நுட்பத்திற்கும், 30 கட்டுரைகள் மின்கல்வி தடத்திற்கும், 24 கட்டுரைகள் மக்கள் கூடத்திற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. செல்போன் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்ட் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல், மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றை கைக்கருவிகளில் கொண்டு வர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்த் தரவுத்தளங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வு அரங்குகள் நடைபெறுகிறது என உத்தமம் மன்ற தலைவர் மு.மணிவண்ணன் தெரிவித்தார். மாநாடு மூன்று நாட்களும் பல்கலைக்கழக முத்தையா அரங்கில் தமிழ் மென்மொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சி அரங்கு குழுவிற்கு கணினி் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வள்ளி ஆனந்தன் தலைமை வகித்து நடத்துகிறார். மாநாடு குறித்த விபரங்களுக்கு கீழ்காணும் மின்முகவரி மற்றும் செல்போனில் தொடர்பு கொள்ளவும்:ed@infitt.org,Chair@infitt.org. செல்போன்: 94440 75051
No comments:
Post a Comment