Saturday 1 December 2012

வீட்டு பாடங்களால் பலனில்லை: அமெரிக்க ஆய்வாளர்கள் தகவல்



              மாணவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்வதால், அவர்களுக்கு பெரிதாக பலன் ஏதும் ஏற்பட போவதில்லை என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின், விர்ஜினியா பல்கலை கழக ஆராய்ச்சியாளர், பத்தாம் வகுப்பு படிக்கும் 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களிடம், ஒரு ஆய்வு மேற்கொண்டனர். வீட்டு பாடம் (ஹோம் ஒர்க்) செய்யும் மாணவர்களின் திறனை இவர்கள் சோதித்து
பார்த்தனர்.
                    இந்த ஆய்வின் மூலம், "வீட்டு பாடத்தால், மாணவர்களுக்கு பெரிய பலன் ஏதும் ஏற்படவில்லை' என்பதை இவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு குழுவின் தலைவர் ராபர்ட் கூறியதாவது: கணக்கு பாடத்தை தவிர, மற்ற பாடங்களை, ஹோம் ஒர்க் செய்வதில் மாணவர்களின் திறன் வளர்ந்ததாக தெரியவில்லை. வீட்டு பாடத்தால் மாணவர்கள், பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். மற்றபடி பெரிய சாதனை செய்ய இந்த, "ஹோம் ஒர்க்&' துணை புரியவில்லை. சொல்லப் போனால், வீட்டு பாடங்கள், மாணவர்களின் மனதை நோகடிக்கிறது.இவ்வாறு ராபர்ட் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment