Saturday 15 December 2012

ஐ.ஐ.எஸ்.டி., யில் படித்தால் விஞ்ஞானி ஆகலாம்!



             கேரள தலைநகரிலுள்ள வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம், துறைவாரியான பி.டெக் படிப்புகளை வழங்குகிறது. 2013ம் கல்வியாண்டில் இப்படிப்புகள் தொடங்குகின்றன.IIST என அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனம், 3 துறைகளில் பி.டெக் படிப்புகளை வழங்குகிறது. அப்படிப்புகளின் விபரம்,பி.டெக் - ஏரோஸ்பேஸ்
இன்ஜினியரிங்இப்படிப்பில், Fluid machanics, heat transfer, aerodynamics, flight mechanics, solid mechanics, material scinece, applied courses in propulsion system, aerospace sturctures, precision manufacturing process for launch vehicles, aircrafts and space crafts போன்ற அம்சங்கள் அடங்கியுள்ளன.பி.டெக் - அவியோனிக்ஸ்எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் தொடர்பான படிப்புகள் இதில் உள்ளன. Control system, digital electronics, VLSI, MEMS design, communication and computer systems with thrust on aerospace vehicle and satellite systems, flight navigation systems, satellite communication, microwave and antenna engineering போன்ற அம்சங்கள் அவற்றுள் அடங்கும்.பி.டெக் - பிசிகல் சயின்ஸ்நாட்டின் அறிவியல் தேவைகளை நிறைவுசெய்யும் விதமாக இப்படிப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. Applied mathematics, classical and modern physics, astronomy and astrophysics, remote sensing and earth system sciences போன்ற அம்சங்கள், இப்படிப்பில் உள்ளடங்கிய அம்சங்களாகும்.சேர்க்கை விதிமுறைகள்அகில இந்திய ராங்க் பட்டியல் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் 60% வெயிட்டேஜ் அடிப்படையில், ராங்க் பட்டியல் இருக்கும். இதைத்தவிர, 40% வெயிட்டேஜ், 12ம் வகுப்பு அல்லது இதர தகுதி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு வழங்கப்படும். இடஒதுக்கீடு உயர்கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய அரசின் விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும். உதவித்தொகை ஒவ்வொரு செமஸ்டருக்கும், கல்விக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு வசதி ஆகியவற்றை, ஒவ்வொரு மாணவனுக்கும், IIST ஏற்றுக்கொள்ளும். ஆனால், IIST நிர்ணயித்த தகுதி நிலைகளை, மாணவர்கள், பூர்த்தி செய்திருக்க வேண்டும். வேலை வாய்ப்புபி.டெக் படிப்பை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில், DOS மற்றும் ISRO போன்ற நிறுவனங்களில், பொறியாளர் அல்லது விஞ்ஞானி என்ற நிலைகளில், பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.விரிவான விபரங்கள் மற்றும் சேர்க்கை கையேடுகள், அடுத்தாண்டு(2013) ஏப்ரல் 30ம் தேதி வெளியிடப்படும். விரிவான தகவல்களுக்கு http://www.iist.ac.in/admission/under-graduate என்ற வலைத்தளம் செல்க.

No comments:

Post a Comment