Saturday, 1 December 2012

நர்சரி மாணவர் சேர்க்கை புதிய விதிமுறைகள் வகுக்க கல்வி துறை ஆலோசனை



                அடுத்த கல்வி ஆண்டு 2013-14ல் நர்சரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான விதிமுறைகளை வகுப்பது குறித்து மாநில கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.இதுபற்றி மாநில கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 2 ஆயிரம் தனியார் நர்சரி பள்ளிகள் உட்பட மொத்தம் 4,500 நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான மாணவ,
மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகளை வகுப்பது என மாநில கல்வித் துறை ஏற்கனவே தீர்மானித்திருந்தது. அதன்படி புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்து மாநில கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் வருகிற அட்மிஷன் பணிகள் துவங்குவதற்கு முன்பாக இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு கல்வித் துறையால் அறிவிக்கப்படும்.பணிகள் முடிந்த தும் வரும் 2013-14ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜனவரி 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். நர்சரி பள்ளிகளில் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடையும். இவ்வாறு அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment