தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும், தேர்வு நிலை தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தேதி என வரையறை இன்றி, தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை தகுதி பெறும் போது தர ஊதியம் ரூ.5400 என நிர்ணயம் செய்ய அரசைக் கேட்டுக் கொள்வது என அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச்
செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் வீ.பாலமுருகபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் செ.ஜார்ஜ் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் உரிய அரசாணைகளை வெளியிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் செயலர் நியமன ஒப்புதலின் போது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கற்பிப்பு மானியத்தை நிறுத்தம் செய்யக் கூடாது.
புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும்.
விருதுநகர் மாவட்டத் தலைவர் செல்வமுருகேசன், மாவட்டச் செயலாளர் ஆதிநாராயணன், மாவட்டப் பொருளாளர் ஸ்ரீராம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார தலைவர் டேனியல் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்புச் செயலாளர் குமார் ஈவேரா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment