Saturday, 1 December 2012

திண்டுக்கல் தமிழக ஆசிரியர் மன்றத்தின் சார்பாக பல தீர்மானங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைக்கபட்டது.



*இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர வேண்டும்.மூன்று நபர் குழு அறிக்கையை விரைந்து அரசு ஆணையாக  வெளி இட வேண்டும்.
*
பட்டதாரி தகுதி பெற்ற  அனைத்து  இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பதவி உயர்வு  வழங்கிடுக.
*புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன்
திட்டத்தை  வழங்கிடுக.
*ஆசிரியர் தகுதி தேர்வை  ரத்து  செய்து,வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆசிரியர் பணி  வழங்கிடுக
*நடுநிலைப் பள்ளிகளில் காலிப் பணி இடங்கள் நிரப்பும் போது பட்டதாரி தகுதி பெற்ற  அனைத்து  இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி  உயர்வு வழங்கிய பின்னர்,காலிப் பணி இடங்களை நேரடியாக  நிரப்புக.
என்று பல தீர்மான்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையாக  வைக்கபட்டது.

No comments:

Post a Comment