Tuesday 1 January 2013

1999ல் பிறந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத முடியுமா?



                            எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதுவோரின் விபரம் சேகரிப்பில்,1999-ல் பிறந்தவர்களை ஆன்-லைனில் ஏற்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது 14 க்குள் இருக்க வேண்டும் என்பது அரசு விதி. 2013 மார்ச்சில் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின்
விபரங்கள், பிறந்த தேதியுடன் ஆன்-லைனில் பதியப்படுகிறது.1998ல் பிறந்தவர்களின் விபரங்கள் ஆன்-லைன் ஏற்கப்படும் நிலையில், 99ல் பிறந்தவர்களின் வயது 14 முடியாததால், ஆன்லைனில் பதிய முடியவில்லை. இதனால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
                            1999
ல் பிறந்த மாணவர்களின் பிறந்த ஆண்டை, தற்காலிகமாக 1998 என குறிப்பிட்டு, பதிவு செய்ய கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க, முடியாமல் உள்ளனர். தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1999ல் பிறந்தவர்களின் வருடத்தை 1998 என குறிப்பிட்டு, சாப்ட்வேரில் ஏற்ற சொல்கின்றனர். இந்த முறை தற்காலிமானது என்றாலும், அதை மீண்டும் சரியாக மாற்றாவிடில், பிறந்த சான்றிதழிலும், எஸ்.எஸ்.எல்.சி., மார்க் பட்டியலிலும் பிறந்த ஆண்டு மாற வாய்ப்பு உள்ளது ' என்றார்.
                                 
கல்வித்துறை கம்ப்யூட்டர் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், "1999ல் பிறந்து,14 வயதை தாண்டாதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 6 மாதம் கால நீடிப்பு சான்றிதழ் பெற்று, வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதன் அடிப்படையில், 14 வயதை கணக்கிட்டு, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பிறந்த சான்று, டி.சி.,யில் உள்ள பிறந்த தேதிக்கு ஏற்ப மார்க் பட்டியலிலும் ஒரே மாதிரி இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் பயப்பட வேண்டாம் ' என்றனர்
.

No comments:

Post a Comment