Saturday 5 January 2013

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர் முழக்கப் போராட்டம்



             மத்திய அரசு 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள ஊதியத்தை தமிழக அரசும் இடை நிலை ஆசிரியர்களுக்கு 1.6.06 முதல் வழங்க வேண்டும்.ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை உடனே ரத்து செய்ய வேண்டும்.தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தையும்
கணக்கிட்டு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழாசிரியர், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பகுதி நேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும். கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப்போராட்டம் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் போராட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment