Tuesday 19 March 2013

அரசுப் பள்ளியின் அறிவியல் கண்காட்சி படைப்புகளில் சமூக நோக்கம்



            படிக்கும் பள்ளியைப் பொறுத்தே மாணவர்களின் ஆக்கத் திறன் அமையும் என்ற பொதுவான நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறது. ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஒரு அறிவியல் கண்காட்சி. 500-க்கும்  மேற்பட்ட
மாணவர்கள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில், இடம் பெற்ற படைப்புகள் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தாக கூறுகின்றனர் மாணவர்கள்.
அறிவியல் படைப்புகளில் சமூக நோக்கம்:
         இருட்டு என்று சலித்துக் கொள்வதை விட ஒரு விளக்கு ஏற்றி வைப்பது மேல் என்று சொல்லப்படுவது உண்டு. அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியலில் சாதிப்பது கடினம் என்று ஒதுக்கிவிடாமல், ஆசிரியர்களின் இடையறாத ஊக்குவிப்பின் காரணமாக, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர் இந்த அரசுப் பள்ளி மாணவர்கள். ஈரோடு மாவட்டம், நாதகவுண்டம் பாளையத்தில் உள்ள ஓர் அரசு நடுநிலைப் பள்ளியில்தான் இத்தகைய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. சமுதாயத்தில் தற்போது நிலவும் தேவைகளுக்கு ஏற்ப அமைந்திருந்த படைப்புகள், மாணவர்களின் சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்தின.
                           "
அரிய தகவல்களை அறிய முடிந்தது" : தனியார் பள்ளிகளுக்கு நிகராக...: செயற்கை உரங்களால் ஏற்படும் தீமைகள், ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையால் ஏற்படும் விளைவுகள், புவி வெப்பமயமாதல் ஆகியவை குறித்த விளக்கங்களை மாணவர்கள் அளித்தனர். கண்காட்சியை பார்வையிட்டவர்கள், பல்வேறு புதிய தகவல்களையும், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தனர். மேலும் பல அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய கண்காட்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். தனியார் பள்ளிகளைப் போன்று தங்கள் பள்ளியிலும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது மகிழ்ச்சியான அனுபவம் என்கின்றனர் மாணவர்கள்.
                           
கல்வியாளர்களின் நீங்காத ஆதங்கம்: ஆக்கத்திற்கு ஊக்கம் தந்த நிகழ்வு: தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளை கொண்டு வர முடியவில்லை என்பது கல்வியாளர்களின் பொதுவான ஆதங்கமாக உள்ளது. இந்த நிலை மாற அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் கண்காட்சிகள், அரசுப் பள்ளி மாணவர்களின் ஆக்க சக்திக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்ற கருத்தையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்
.

1 comment:

  1. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை.
    தமிழக அரசின் ஆணைப் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு மற்றும் போட்டித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வது வழக்கம். இதில் கணினி ஆசிரியர்களாக பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, வாழ்க்கைக் கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் படித்து வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு கடந்த 5.3.2012 அன்று 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களாக நியமித்து தமிழக அரசு பணி ஆணை வழங்கியது. இதில் கடந்த ஒரு ஆண்டாக கணினித்துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது அரசு 6ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது ஏற்கனவே ஒரு ஆண்டாக பள்ளிகளில் கணினி பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இப்பணியிடங்கள் நிரப்புவதில் தேர்வு மற்றும் பதிவு மூப்பைக் கடைபிடிக்காமல் எங்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ReplyDelete