Friday, 5 April 2013

மேலூரில் 2 பள்ளிகள் தரம் உயர்வு



                சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, .தி.மு.., எம்.எல்.., சாமி பேசுகையில், "மேலூர் தொகுதி, மங்களாம்பட்டி, பள்ளப்பட்டி, தெற்குத்தெரு, தும்பைப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுமா" என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: மதுரை, மேலூரில், தெற்குத் தெரு மற்றும் தும்பைப்பட்டி ஆகிய இரு அரசு உயர்நிலைப் பள்ளிகள், 2012-13ம் கல்வியாண்டில், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற இரு பள்ளிகளை தரம் உயர்த்த, அரசுக்கு செலுத்த வேண்டிய பங்குத் தொகை வழங்கப்படவில்லை. இத்தொகையை வழங்கினால், 2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment