Monday, 22 April 2013

பள்ளி திறந்த ஒரே வாரத்தில் பஸ் பாஸ் வழங்க உத்தரவு



             அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் தகுதியுள்ளோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் கார்டு வடிவில் பஸ் பாஸ்
வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் பஸ் பாஸ் கிடைக்காமல் மாணவ,மாணவிகள் தவித்தனர். வரும் கல்வியாண்டில் அதுபோன்ற நிலை வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த ஒரே வாரத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ஸ்மார்ட் கார்டு பிரின்ட் செய்யும் நிறுவனங்களுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment