Tuesday, 9 April 2013

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் எப்போது?



                          தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்த ஆண்டு முன்கூட்டியே, மே முதல் வாரத்திலேயே விண்ணப்ப விநியோகம் தொடங்கும் எனத் தெரிகிறது. பிளஸ் 2 பாடத் திட்டத்தில்
இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகியவற்றை படித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆர்வமாக உள்ளனர். கடந்த ஆண்டு மே 22ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஆண்டு மே 15ம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது.
                             பி.. கலந்தாய்வுக்கு முன்பு... உச்ச நீதிமன்றம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (..சி.டி..) ஆகியவற்றின் உத்தரவைத் தொடர்ந்து இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை வரும் ஜூலை 30-ம் தேதிக்குள் முடிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களின் வசதிக்காக பி.. கலந்தாய்வுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை தொடங்கும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது. எனவே பி.., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம், கலந்தாய்வு தேதிகள் குறித்து உயர் கல்வித் துறை தீவிரமாக திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் இந்த ஆண்டு மே 2வது வாரத்துக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
                 சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதேபோன்று 12 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 900-க்கும் மேற்பட்ட சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர்களைச் சேர்க்க முதல்கட்டமாக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட உள்ளன. மே முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment