Wednesday, 24 July 2013

இணையதளம் மூலம் 10 நிமிடத்தில் மணி ஆர்டர் சேவை: தபால் துறை அறிமுகம்

             இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இரண்டு நபர்கள் இண்டர்நெட் மூலம் பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர்
சர்வீசில் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும்பெறவும் முடியும். தற்போது தபால் அலுவலகங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் தந்தி மணி ஆர்டர் என்ற சேவையில் விரைவாக பணம் அனுப்பினால் ஒரே நாளில் பணம் கிடைத்து விடுகிறது.வழக்கமான மணி ஆர்டர் சேவையில் பணம் அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க இரண்டு நாட்கள் ஆகிறது. கிராமப்புற பகுதிகளுக்கு அனுப்பினால் மூன்று நாட்கள் ஆகிறது.
                        இந்த நிலையில், இணைய தளம் வழியாக பணம் அனுப்பும் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இருந்தும்  பணம் அனுப்பும் உடனடி மணி ஆர்டர் சர்வீசில் 10 நிமிடத்தில் பணம் அனுப்பவும், பெறவும் முடியும். தபால் நிலையத்தில், பணம் அனுப்புபவரிடம் கொடுக்கப்படும் ரசீதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த எண்ணை, மறுமுனையில் பணம் பெறுபவருக்கு தொலைபேசி அல்லது எஸ்.எம்.எஸ். அல்லது இமெயில் மூலம் தெரிவித்தால் போதும். பணம் பெறுபவர், தபால் நிலையத்துக்கு சென்று, உரிய அடையாள அட்டையுடன், 16 இலக்க எண்ணை தெரிவித்து பணத்தை பெறலாம். இந்த சேவையின் மூலம் அனுப்புவதும், பெறுவதும் எளிதாக இருக்கிறது.

       இந்த சேவையில், ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகைக்கு ரூ.100 மணியார்டர் கட்டணம் வசூலிக்கப்படும். 10 ஆயிரத்து ஒரு ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதற்கு ரூ.110-ம், 30 ஆயிரத்து ஒரு ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவதற்கு ரூ.120-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தபால் துறை தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment