Friday 26 July 2013

சத்துணவுக்காக சப்ளை செய்யப்படும் தரமற்ற பொருட்களை திருப்பி அனுப்புங்கள்



              திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, சமூக நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், சமூக நலத்துறை அமைச்சர் .வளர்மதி தலைமையில்
நடைபெற்றது. அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், கலெக்டர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சத்துணவு மையங்களின் செயல்பாடுகள், மையங்களுக்கு சப்ளை செய்யப்படும் உணவு பொருட்களின் தரம், அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து வளர்மதி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:சத்துணவு மையங்களை தினமும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பிடிஓ அலுவலக அதிகாரிகள் அதற்காக தனி கவனம் செலுத்த வேண்டும். சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமாக இருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே அனுப்ப வேண்டும்.உணவு பொருட்கள் தரமற்றதாக இருந்தால், உடனடியாக அதை நுகர்வொருள் வாணிபக்கழக கிடங்குக்கு திருப்பி அனுப்ப வேண்டும். முட்டைகளை பிடிஓ அலுவலகத்திலேயே தரத்தை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.சத்துணவு மைய அமைப்பாளர்கள், சமையலர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்பு கொண்டு கண்காணித்தால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். முட்டை கெட்டிருந்தால் உடனடியாக திருப்பி அனுப்ப அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment