அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும்சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்க,மாநில இயக்குனரக உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும், 6 - 14
வயது வரை உள்ள, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும்மாற்றுத்திறாளிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. அந்தந்த யூனியன்பகுதியில் உள்ள, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள்இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு, கடந்தஏப்.,10ம் தேதி, மாநிலம் முழுவதும் துவங்கியது. கணக்கெடுப்பு பணியின்போது சேகரித்த விவரங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலஇயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம்முழுவதும், 6 - 10 வயது வரை, 18,216 பேரும், 11 - 14 வரை, 29,160 பேரும்பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக,விழுப்புரம் மாவட்டத்தில், 4,587 பேரும், குறைந்த பட்சமாக, நீலகிரிமாவட்டத்தில், 462 பேரும் பள்ளி செல்லாமல் உள்ளனர். மேலும், தேனிமாவட்டம், 545 பேர், கன்னியாகுமாரி, 551 பேர், புதுக்கோட்டை மாவட்டம், 572பேர் என, குறைந்த அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளது,கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட பள்ளி செல்லாகுழந்தைகளுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும்சேர்க்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளி குறித்து கணக்கெடுப்பு:
தமிழகம் முழுவதும், ஐந்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசுதொடக்கப் பள்ளி குறித்து கணக்கெடுப்பு நடத்த, மாவட்ட கல்விஅலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தர்மபுரிமாவட்டத்தில் உள்ள, 836 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடந்தகணக்கெடுப்பில், பாலக்கோட்டை அடுத்த, அய்தாண்டஹள்ளி அரசுதொடக்கப் பள்ளியில், 3 மாணவர் மட்டும் படிப்பது தெரியவந்து உள்ளது.இங்கு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 5ம் வகுப்பில் தலா, 1 மாணவர் என, மொத்தம், 3மாணவர்களே படித்து வருகின்றனர். இப்பள்ளி குறித்து மாவட்ட நிர்வாகம்மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்பநடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியது: பெற்றோர், தங்களதுகுழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெருமையாகக்கருதுகின்றனர். இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும்,ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டாலும், பெரும்பாலானோர் தங்களதுகுழந்தைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்பதைப்பெருமையாகக் கருதுகின்றனர். அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கூட, தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதன் விளைவாகஇது போன்ற நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக உள்ளது. இதனால், அரசுபள்ளிகளில், 5க்கும் குறைவாக உள்ள படிக்கும் மாணவர்களால் அரசுக்குச்செலவு ஏற்படுவதை விட, அங்கு பணியாற்றும் ஆசிரியர், மாணவர்களுக்குமுழு ஈடுபாடு உடன் கல்வி கற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment