Wednesday 31 July 2013

கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கெடு



              கல்வி கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் அந்தந்த பள்ளியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட அனைத்து
பள்ளிகளும் தங்கள் பள்ளி தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்களது பள்ளி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆப் செக்கண்டரி எஜூகேஷன் (சிபிஎஸ்இ) உத்தரவிட்டுள்ளதுமாணவ, மாணவியரிடம் இருந்து பெறப்படுகின்ற கல்வி கட்டணம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, இதர விபரங்கள்அவர்களுக்கு சம்பளம் வழங்கும் முறை, நிர்வாக ரீதியில் உறுப்பினர் விபரங்கள் ஆகியவை வெளியிடப்பட வேண்டும். ஒரு மாதத்தில் இந்த விபரங்களை வெளியிடாத பள்ளிகளின் மாணவ, மாணவியர் வாரிய தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பல பள்ளிகள் இன்னமும் தங்களுக்கென்று தனியாக இணையதளம் எதனையும் தொடங்கவில்லை. இந்த விபரம் தெரியவந்த நிலை யில் சிபிஎஸ்இ துணை செயலாளர் யு.சி.போத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
                                
பள்ளியின் இணையதளத்தில் பள்ளி பெயர், முகவரி, என்ஒசி கிடைத்த ஆண்டு, எந்த அதாரிட்டியின் அங்கீகாரம் கிடைத்துள்ளது, 1956ல் கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கம்பெனியா, பள்ளியை நடத்து வது டிரஸ்ட்டா, சொசைட்டியா, நிர்வாக குழுவின் பெயர் விபரங்கள், மானேஜர், சேர்மன் விபரங்கள், பள்ளிக்கு உள்ள இடம், கட்டிட விபரங்கள், விடுதி, நூலகம், வாகன வசதிகள், ஆசிரியர்கள் பிறந்த தேதி அடங்கிய விபரங்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர் விபரங்கள், வகுப்பு வாரியாக மாணவர் விபரம், கல்வி கட்டண விவரம், புகார் களை கையாளுகின்ற அலுவலர் பெயர், பாலியல் குற்றங்களை கண்டறிய அமைக்கப்பட்ட குழு விபரம் ஆகியவையும் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். மேலும் எல்லா ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் இந்த விபரங்கள் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது
.

No comments:

Post a Comment