Friday, 26 July 2013

Plus 2, HSC , +2 Special Supplementary Examination Results Published - June 2013 பிளஸ் 2 உடனடித்தேர்வு: இணையத்தில் முடிவுகள் வெளியீடு

                          பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு, தேர்வுத்துறை இணையதளத்தில், இன்று வெளியிடப்படுகிறது. செய்முறை அடங்கிய பாடத்தை எழுதிய தேர்வர்களில் சிலர், செய்முறை
மதிப்பெண் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யாததால், அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனபிளஸ் 2 உடனடித் தேர்வு, கடந்த மாதம், 19ம் தேதியில் இருந்து, ஜூலை, 1 வரை நடந்தது. இதனை, 83,510 மாணவ, மாணவியர் எழுதினர். இந்த தேர்வு, 244 மையங்களில் நடந்தது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 3ம் தேதி, உடனடித் தேர்வு முடிவு வெளியான நிலையில், இந்தாண்டு, ஒரு வாரத்திற்கு முன்னதாக, இன்று பிற்பகலில் வெளியிடப்படுகிறது என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தேர்வர்கள் இணையதளத்தில், இன்று பகல், 12:00 மணி முதல், தேர்வு முடிவை அறியலாம். பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்தால், முடிவை அறியலாம்.

                         செய்முறை அடங்கிய பாடத்தை எழுதிய தேர்வர்களில் சிலர், செய்முறை மதிப்பெண் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யாததால், அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனமேலும், சில தேர்வர்களின் பதிவு எண்கள், தேர்வுத்துறை அலுவலக ஆவணத்துடன் பொருத்தமாக இல்லாததால், அவர்களின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனஇந்த மாணவர்கள், கடந்த மார்ச்சில் தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் பட்டியலை, மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகே, இந்த வகை மாணவர்களின் தேர்வு முடிவை வெளியிட முடியும்தனித்தேர்வர்கள் (கடந்த மார்ச்சில், தனித்தேர்வு எழுதியவர்கள்), வரும், 30ம் தேதி, தேர்வெழுதிய மையங்களுக்குச் சென்று, மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்து, தேர்வெழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கு, அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டல் குறித்த அறிவிப்புகள், விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment