இடைநிலை ஆசிரியரின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்துள்ளது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
ரங்கநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை
வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சரவணன் வரவேற்றார். கூட்டம் குறித்து, சங்க பொதுச்செயலாளர் தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு 6 வது ஊதியக்குழுவின் குறைபாடுகளை நீக்க மூன்று நபர் குழுவை அறிவித்தது.இக்குழு அறிக்கைபடி, தற்போது, வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இடை நிலை ஆசிரியர்களின் தர ஊதியம் ரூபாய் 2,800 என உள்ளதை ரூபாய் 4200 என மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போதைய ஊதியம், கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது. குழுவின் அறிவிப்பு ஆசிரியர்களை ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைய வைத்துள்ளது.தொடக்க கல்வித்துறையில் 85 சதவீதம் பெண் ஆசிரியைகளே உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்திருந்தோம். இதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தமிழக முதல்வர் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment