Sunday 28 July 2013

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்த 652கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பல வருடங்களாககம்ப்யூட்டர் ஆசிரியர்களாக ஏராளமானவர்கள் பணியாற்றினார்கள்இவர்கள்தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் முறையிட்டனர்உண்ணாவிரதம்ஆர்ப்பாட்டம்சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்இந்த போராட்டம் பல வருடங்களாகநடந்ததுபலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில்அவர்களுக்கு தமிழக அரசு உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.அந்த தேர்வில் 50 சதவீத மார்க் எடுத்தவர்கள் முதலில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்பின்னர் தேர்ச்சிமதிப்பெண் சதவீதம் குறைக்கப்பட்டதுஇதனால் 35 சதவீதம் மார்க் வரை எடுத்தவர்களும் கம்ப்யூட்டர்ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்டனர்இவர்கள் பி.எட்படிக்காதவர்கள்.இந்த நியமனத்தை எதிர்த்துபி.எட்படித்தவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்இந்த வழக்கில்பி.எட்படிக்காமல்பணிபுரியும் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டுஉத்தரவிட்டது.
பணி நீக்கம்

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டதுஇது பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாதிப்பைஏற்படுத்தி உள்ளது.

1 comment:

  1. will be give chance to BEd computer science teachers,pls think our feeling...................

    ReplyDelete