Wednesday 28 August 2013

டைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம்; தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு

             தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்வுகள் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில்
நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு இத்தேர்வு வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் ஜூனியர் பிரிவு 4ம் பேட்ஜ் வரை காலை 9.30 மணி முதல் மாலை 4.05 மணி வரை நடக்கிறது. வரும் 1ம் தேதி தமிழ், ஆங்கிலம் ஜூனியர் பிரிவு 5ம் பேட்ஜ்க்கு காலை 8.30 மணி முதல் 9.35 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து காலை 10.20 மணி முதல் 3.20 மணி வரை சீனியர் பிரிவுக்கு தேர்வு நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 10.20 மணி முதல் 12.20 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ஹை ஸ்பீடு தேர்வுகளும், அன்று மாலை 3.50 மணி முதல் 4.40 மணி வரை டைப்ரைட்டிங் தமிழ், ஆங்கிலம் ப்ரீ-ஜூனியர் பிரிவுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இவர்களுக்குரிய ஹால் டிக்கெட்டுகள் அந்தந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் அனுப்பபட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பிரிவு தட்டச்சர் பணிக்கு டைப்ரைட்டிங் அவசியம் என்பதால் பலர் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டம்
                          நெல்லை மாவட்ட பகுதிகளை சேர்ந்த தேர்வர்களுக்கு செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக், சங்கர்நகர் சங்கர் பாலிடெக்னிக், சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக், தென்காசி செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக், வடக்கன்குளம் எஸ். ராஜா பாலிடெக்னிக் ஆகிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட டைப்ரைட்டிங் நிறுவன உரிமையாளர்கள் சங்க தலைவர் பாண்டிக்கண்ணு, செயலாளர் சுந்தரமுருகன், பொருளாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் பழனியப்பன், முத்துக்குமார், சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
கம்ப்யூட்டர் தேர்வு

                       கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டேமேஷன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் பலர் 80 சதவீதத்திற்கும் அதிகமாகவும், முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

No comments:

Post a Comment