Friday, 30 August 2013

பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து


            அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின்
அங்கீகாரம், ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 676 கல்வியியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. புதிய கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, தனியார் பி.எட்., கல்லூரிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்ய, பல்கலைக்கழகம், குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுக்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், விதிமீறி செயல்படும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

                        இக்குழு, துணைவேந்தர் தலைமையில், 15 கல்லூரிகளை பார்வையிட்டது. இதில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்ட, மதுரை ராயல் கல்வியியல் கல்லூரி, வேதாரண்யம் ராமச்சந்திரா மகளிர் கல்வியியல் கல்லூரி, சேலம் கொங்குநாடு இருபாலர் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. ஆய்வில், அடிப்படை கட்டமைப்பு வசதி இன்றி செயல்பட்ட கல்லூரிகள், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், கன்னியாகுமரி, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment