Wednesday 28 August 2013

6ம் வகுப்பிலேயே ஆய்வக அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்



                          "ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, ஆய்வகங்களுக்கு, அழைத்துச் சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்" என மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்..,) மாநில
இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார்.b கல்வியில் பின்தங்கிய, 44 ஒன்றியங்களில், 44 மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், ஆர்.எம்.எஸ்.., மாநில இயக்குனர், சங்கர் பேசியதாவது: மாணவர்கள், பல வகையாக இருப்பர். அனைத்து மாணவர்களுக்கும், ஒருவித தனித்திறமை இருக்கும். அதை, கண்டறியும் பணியை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். சில மாணவர்கள், பாடத்தில் ஆர்வம் இல்லாவிட்டாலும், விளையாட்டுகளில், ஆர்வம் அதிகம் இருக்கும். இதுபோன்று, மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து, அதில், மாணவர்களின் திறமையை மேலும் வளர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் இருந்துதான், மாணவர்கள், ஆய்வகங்களுக்கு, அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவர்களை, ஆய்வகங்களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியலை விளக்க வேண்டும். மாதிரிப் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு, சங்கர் பேசினார்.

No comments:

Post a Comment