Friday, 30 August 2013

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி



            அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்திட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் தலைமையாசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. பழநி அட்சயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆக., 30 ல், நடக்கும் முதற்கட்ட பயிற்சியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களை சேர்ந்த 76 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் இயக்குனர் சங்கர், இணை இயக்குனர் நரேஷ், மாநில ஆலோசகர்கள் முத்துச்சாமி, ஜெயச்சந்திரன் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment