திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரிகளின் சொதப்பலால், சென்னையில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க வந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், ஏமாற்றத்துடன்
திரும்பிச் சென்றனர். பள்ளிக்கல்வித் துறை சார்பில், எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும், அறிவியல் கருத்தரங்கு போட்டிகள், ஏற்கனவே நடந்தன. இதில், மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவ, மாணவியர், மாநில அளவில், சென்னை, எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதில் திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியரும் வந்திருந்தனர். இவர்களை, போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என, அதிகாரிகள் தெரிவித்ததும், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எட்டு முதல், 10ம் வகுப்பு வரையான மாணவர்களை மட்டுமே, போட்டியில் பங்கேற்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட அளவிலும், மேற்கண்ட மாவட்டங்களில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை பங்கேற்க, சி.இ.ஓ.,க்கள் அனுமதித்துள்ளனர். இதன் அடிப்படையில், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும், அனுமதித்து உள்ளனர். சி.இ.ஓ.,க்கள் செய்த இந்த குளறுபடியால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், பெற்றோர், தேவையற்ற மன உளைச்சலுடன், சொந்த மாவட்டங்களுக்கு, திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment