Saturday 24 August 2013

டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி



                               ""டி..டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை,'' என, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார். இம்மாதம், 17, 18 தேதிகளில், டி..டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர்
எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும். முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி..டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்' செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி..டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம். விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.

1 comment:

  1. hello Darmaburi la question mun kuttiyea veali vanthum . . . this TET exam la pass pannittom nu happy ya irukara my dear friends just one think,
    neega padithu 119 mark vaanginaalum
    panam koduthu 120 mark la pass panravanugaluku thaan GOVT POST.
    maraka veandam.
    TET Paper 1 yeanraal no problem. bez post only seniority.
    but if you paper 2 . . .
    you can't chance get govt post.
    veram TET mark sheet mattom thaan ungaluku kidaikum.
    be understand

    ReplyDelete