Friday 23 August 2013

பிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்


              பிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் பிற மொழிச்
சொற்களுக்கு இணையான, தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்; பழைய தமிழ்ச் சொற்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; மக்களிடையே புழக்கத்தில் உள்ள சொற்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், புதிய பயன்பாட்டுத் தேவைக்கேற்பவும் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறையால், சொல் வங்கித் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, மொழி வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள், மாதம் ஒரு முறை கலந்துரையாடி, புதிய சொற்களை உருவாக்கி, துறைக்கு அளிப்பர்.

ஏற்கனவே, இத்திட்டத்தில், 63 கூட்டங்கள் நடந்து, 936 பிறமொழிச் சொற்களுக்கு இணையான, புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன், 64வது கூட்டம், நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், வைகை செல்வன் தலைமையில் நடந்தது.

                       இதில், .வே.பசுபதி உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில், ஆங்கிலம் மற்றும் பிறமொழியில் உள்ள, 35 சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. அமைச்சர் வைகை செல்வன் பேசுகையில், "சொல் வங்கி உருவாக்கத்தில், இன்னும் அதிகமான அறிஞர்களை ஈடுபடுத்த வேண்டும். இதனால், மொழிக்கு அதிக அளவிலான புதிய சொற்கள் உருவாகும். மாறி வரும் நவீன தொழில்நுட்பத்துக்கு இணையாக, தமிழ்ச் சொற்களை உருவாக்கினால், தமிழ் மேலும் வளரும்" என்றார்.

No comments:

Post a Comment