Sunday, 25 August 2013

பள்ளி கட்டிடம், வேன்களை வாடகைக்கு விட்டால் மட்டுமே சேவை வரி



           பள்ளி கட்டிடம், வாகனங்களை பள்ளிக்கு தேவைக்கு இல்லாமல் மற்ற பணிகளுக்கு வாடகைக்கு விட்டால் மட்டுமே சேவை வரி செலுத்த வேண்டும். இது தொடர்பான புதிய உத்தரவு விரைவில் வெளியிடப்படவுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் தனியார்
பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் 13.5 சதவீதம் சேவை வரியாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சேவை வரியை ரத்து செய்வது தொடர்பாக அவசர கூட்டம் ஒன்றை பெங்களூரில் கடந்த வாரம் நடத்தினர். அதில் எடுத்த முடிவுகளின்படி முதற்கட்டமாக சேவை வரியை ரத்து செய்யக் கோரி மத்திய நிதி அமைச்சருக்கு ஒரு கோடி தபால்களை கடந்த 7 தேதி முதல் அனுப்பினர். அடுத்து, தனியார் பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், பொது செயலாளர் இளங்கோவன் உள்பட 6 பேர் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் .சிதம்பரத்தை நேற்றுமுன்தினம் சந்தித்து மனு கொடுத்தனர். அமைச்சர் .சிதம்பரம், வருவாய் துறை செயலர் ஸ்மித் போசுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து வருவாய் செயலர் ஸ்மித் போஸ், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கூறியதாவது: பள்ளி கூடம், மாணவர்களுக்கு இந்த வரி பொருந் தாது. விடுமுறை நாட்களில் பள்ளி கட்டிடத்தை கல்வி தொடர்பு இல்லாத காரியங்களுக்கு வாடகைக்கு விட்டாலோ, அல்லது பள்ளி வாகனங்களை பள்ளிக்கு தேவைக்கு அல்லாமல் மற்றவைகளுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருகின்ற வருவாய்க்கு மட்டுமே சேவை வரி செலுத்த வேண்டும். தற்போது விடுத்துள்ள நோட்டீசை திரும்ப பெற்று திருத்திய புதிய உத்தரவை இன்னும் 2 தினங்களில் இணைய தளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு ஸ்மித் போஸ் கூறினார்.

No comments:

Post a Comment