Thursday 29 August 2013

கோரிக்கைகளை வென்றெடுக்க அலைக்கடலென ஆர்ப்பரித்து வாரீர்- TNPTF மாநிலை தலைமை - ஆசிரியர்களுக்கு அழைப்பு

             தமிழ்நாடு ஆசிரியர்களில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் துயர் துடைக்கவும், பலனற்ற தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்திடவும் வலியுறுத்தி அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் 30.08.2013 அன்று நடைபெறும் மறியல் போர் போராட்டத்திற்கு அலைக்கடலென ஆர்ப்பரித்து வாரீர் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணியின் மாநிலத் தலைவர் திரு.கண்ணன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை 5200-20200+2800 என்பதை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் 9300-34800+4200 என மாற்றித்தரக் கோரியும், குறிப்பாணை மூலம் ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் பிடிக்கப்படும் தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்யக் கோரியும் 30.08.2013 அன்று காலை 10.00 மணிக்கு தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணி சாலை மறியல் போர் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இவ்விரு கோரிக்கைகளின் முக்கியத்துவம் அறிந்து அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை அரசுக்கு கேட்கும் விதமாக எழுப்பி கோரிக்கைகளை வென்றெடுக்க அலைக்கடலென வாரீர் என  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்ட்ணி அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment