Tuesday 8 October 2013

பார்கோடிங் திட்டம், சமீபத்தில் நடந்த தனித்தேர்வுகளில், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. இது, 100 சதவீதம், சக்சஸ் என, முடிவு வந்திருப்பதால், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய திட்டம், அமலுக்கு வருகிறது.


                             சோதனை ரீதியில் அமல் : தேர்வு முறைகேடுகளை, முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுத்தேர்வு, 100 சதவீதம் அளவிற்கு, பாதுகாப்பான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையிலும், சமீபத்தில் நடந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித் தேர்வுகளில்,
பார்கோடிங் மற்றும் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கும் திட்டம், சோதனை ரீதியில் அமல்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட பாடத் தேர்வுகள் என்றில்லாமல், அனைத்து பாடங்களுக்கும், பார்கோடிங் திட்டத்தை அமல்படுத்தியதுடன், மாணவரின் புகைப்படத்தை, விடைத்தாளின் முதல் பக்கத்தில் அச்சிட்டும் வழங்கப்பட்டன. பார்கோடிங்கை, ஸ்கேன் செய்தால், அந்த விடைத்தாளுக்குரிய, டம்மி எண் தெரியும். விடைத்தாள்களை கலக்கும் இடம் முதல், விடைத்தாளை மதிப்பீடு செய்து, மதிப்பெண்களை, கம்ப்யூட்டரில் தொகுக்கும் இடம் வரையிலும், ஒரு விடைத்தாளின், உண்மையான பதிவு எண்கள் விவரத்தை, யாரும் தெரிந்துகொள்ள முடியாது. இது தான், பார்கோடிங் திட்டத்தின் சிறப்பு. தேர்வு முடிந்ததற்கு பின், புதிய முறையில், விடைத்தாள் மதிப்பீடு, மதிப்பெண்கள் பதிவு என, அனைத்தும் நடந்தது. பிளஸ் 2 விடைத்தாள்கள், சென்னை மற்றும் மதுரையிலும், 10ம் வகுப்பு விடைத்தாள்கள், ஈரோடு மற்றும் திருச்சியிலும், மதிப்பீடு செய்யும் பணி, நேற்று துவங்கியது. நான்கு இடங்களுக்கும், தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் சென்று, புதிய திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார்.

                          தேர்வுத்துறை மகிழ்ச்சி : பார்கோடும், அதற்குரிய மாணவர்களின் பதிவு எண்களும், 100 சதவீதம் அளவில், சரியாக இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த குளறுபடிகளும் இன்றி, திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், பார்கோடிங் திட்டம், 100 சதவீதம், சக்சஸ் ஆகியிருப்பதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள், மகிழ்ச்சி தெரிவித்தன. இதையடுத்து, வரும், மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்வுகளிலும், பார்கோடிங் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்களை வழங்கும் திட்டம், அமலுக்கு வரும் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment