Friday 4 October 2013

முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம், தள்ளிப்போகும்?


         முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து,உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். ஆசிரியர்தேர்வு வாரியம்அரசு  மேல்நிலைப்பள்ளிகளில்2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப,  ஜூலை21ல்,போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம்
பேர்தேர்வை எழுதினர்.இதில்அதிகபட்சமாகதமிழ் பாட தேர்வை33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு,தேர்வுப் பட்டியலை வெளியிடடி.ஆர்.பி.தயாரான நிலையில்தமிழ்பாடகேள்வித்தாளில47 கேள்விகள்பிழையுடன் இருந்ததாககூறிமதுரையைச் சேர்ந்த தேர்வர்உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை,ரத்து செய்துபுதிதாகவேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது.

                  இதையடுத்துகோர்ட் தீர்ப்பின்படிதமிழ் பாடதேர்வர்களுக்குபுதிய தேர்வை நடத்துவதாஅல்லது,மேல் முறையீடு செய்வதா என டி.ஆர்.பி.,தமிழக அரசின் ஆலோசனையை பெற்று,அதனடிப்படையில்முடிவு எடுக்கப்படும் என,துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நீதிமன்றம் மறுதேர்வுக்கு உத்தரவிட்டபோதும் அரசு தீர்ப்பை எதிர்த்தது மேல்முறையீடு செய்யுமாஅல்லது மறுதேர்வு நடத்துமா என்பது ஓரிருநாளில் தெரியவரும் .மேலும் அரசின் முடிவுக்காக காத்திருக்கும் சி ,டி பிரிவில் தேர்வு எழுதி மறுதேர்வால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கருதும் தேர்வர்கள் சிலர் மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம் தள்ளிப் போகும் நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது. டி.ஆர்.பி.எந்தமுடிவை எடுத்தாலும்முதுகலை தமிழ் ஆசிரியர்பணி நியமனம்தள்ளிப்போகும். ,தற்போதையசூழல் காரணமாகதமிழ் ஆசிரியர் நியமனம்தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment