Saturday 12 October 2013

அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறும் பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை.ஐகோர்ட்டு உத்தரவு



           அரசு உதவி பெறும் கல்லூரிகள் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெறதேவையில்லை ஐகோர்ட்டு உத்தரவு சென்னை ஐகோர்ட்டில்திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு மெமோரியல் கல் லூரியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,
எங்கள் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார்,எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:கல்லூரிகளில் அரசு அனுமதித்துள்ள பணியிடங்களில்காலியிடம் ஏற்படும் போதுஅதை நிரப்புவதற்கு கல்லூரி கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற வண்டும் என்று தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்திலும்விதிகளிலும் கூறப்பட வில்லை. மேலும்ஒருவருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும்இந்த பணி நியமனம் என்பது கல்லூரி கல்வி இயக்குனரின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றுதான் குறிப்பிடப்படுகிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment