Friday, 12 April 2013

ஆன்லைனில் உள்ள படிக்கும் மாணவர்களின் விவரங்களை, துல்லியமாக ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது.



         தமிழகத்தில்அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும்ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்துள்ளதுஇதில், 22 லட்சம்மாணவர்களின் விவரங்கள் விடுபட்டுள்ளனநகர்ப்புறங்களில்...:தமிழகத்தில்
சமீப காலமாகஅரசு துவக்கப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையில்கடும் சரிவு இருந்து வருகிறது.அதிலும்நகர்ப்புறங்களில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஒற்றை  இலக்கங்களில்மாணவர் எண்ணிக்கையை கொண்டு இயங்கும் நிலையில் உள்ளனமாணவர் எண்ணிக்கை குறையும்பள்ளிகளில்மாணவர் - ஆசிரியர்  விகிதத்தை கணக்கிட்டுஜூனியர் ஆசிரியர்கள்இடமாற்றம் செய்யப்படுகின்றனர் நகர்ப் பகுதிகளில் வசிக்கும்ஆசிரியர்கள்அதே பள்ளியில் நீடிக்கவே விரும்புகின்றனர்இதனால்,மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும்அவற்றைகணக்க ஏடுகளில் குறையாமல் பார்த்துக் கொள்கின்றனர்.பள்ளி கணக்கேடுகளில், 30 மாணவர்இருந்தாலும்உண்மையில்அந்த பள்ளிக்கு,15 மாணவர்கள் மட்டுமேவந்துகொண்டிருப்பர்.  இந்த நிலைபல அரசு பள்ளிகளில் காணப்படுகிறதுஇப்படிகள்ளத்தனமாக காட்டப்படும் மாணவர்களுக்கான சலுகைகளை,மற்றும் தகவல் தொகுப்புக்காகஅனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும்சத்துணவுஅமைப்பாளர்கள்பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளதுகடந்தஆண்டில்கல்வி தகவல் மேலாண்மை முறை மாணவர் விபரங்களையும்,படிவங்களில் சேகரித்துஅவற்றைஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யஉத்தரவிடப்பட்டதுஇப்படிவத்தில்ஒவ்வொரு மாணவரின்ஜாதிமதம்,பிறந்த தேதிரத்த வகைபோட்டோ உள்ளிட்ட, 36 வகையான தகவல்கள்கேட்கப்பட்டிருந்தன.
                                  தனியார் பள்ளிகள்ஒவ்வொரு பள்ளிக்கும்தனித்தனியே, "யூசர் ஐடிமற்றும், "பாஸ்வேர்டுவழங்கிஅனைத்து விவரங்களையும், "ஆன்லைனில்'பதிவேற்ற உத்தரவிடப்பட்டிருந்ததுஇதில்தனியார் பள்ளிகளும்மாணவர்கள் குறித்த விவரங்களை பதிவேற்றம் செய்வதால்தனியார்பள்ளியில் சேர்ந்திருந்தாலும்அரசு பள்ளியிலேயே கணக்கில்வைத்திருக்கும், "போலிமாணவர்கள் விவரங்களைபதிவேற்றம் செய்வதில்சிக்கல் ஏற்பட்டதுவிபரம் சரிபார்க்கும் போதுமாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால்உண்மையில் பள்ளிக்கு வரும் மாணவர்களது விவரங்களைமட்டுமேஆசிரியர்கள் பதிவேற்றம் செய்துள்ளனர்தற்போது இந்த பணிமுடிவடைந்துள்ளதுகணக்கு ஏடுகளில், 1.35 கோடி மாணவர்கள் உள்ள நிலையில், 1.13  கோடி மாணவர்களின்  விபரம் மட்டுமேபதிவேற்ற செய்யப்பட்டுள்ளது.
போலி பட்டியல்கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவதுஆன்லைன் மூலம்
பதிவேற்றம் செய்யப்பட்டதால்போலி மாணவர் பட்டியலைதொடர்ந்து கண்டுபிடிக்க முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளதுமாட்டிக் கொள்ள நேரிடுமோ என்ற பயத்தில், 22 லட்சம் பேரின் விபரங்களை ஆசிரியர்கள் பதிவு
செய்யவில்லைஅதே நேரம் ஒரு சில ஆசிரியர்கள், "டபுள் என்ட்ரிஆனாலும் பரவாயில்லை எனபோலி பட்டியலையும் பதிவு செய்துள்ளனர்இவற்றை சரி செய்யும் போதுஇன்னும் பல லட்சம் மாணவர்கள் விடுபடும் நிலை உள்ளதுதனியார் மற்றும் உயர்நிலைமேல்நிலைப் பள்ளிகளில் இப்பிரச்னை இல்லைதற்போதுஇவற்றை சரி செய்யமீண்டும் ஒரு வாய்ப்புபள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுமீண்டும் பள்ளிகள் ஆன்லைனில் உள்ள விவரங்களை,
துல்லியமாக  ஏப்ரல், 18ம் தேதிக்குள் சரி பார்க்கஉத்தரவிடப்பட்டுள்ளது.  இவை நிறைவடையும் நிலையில்பள்ளிகளில் உண்மையில் படிக்கும் மாணவர்களின்
எண்ணிக்கைதுல்லியமாக தெரியவரும்இவ்வாறுஅவர்கள் கூறினர்

No comments:

Post a Comment