Wednesday, 10 April 2013

மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு.



                         மத்திய பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.மத்திய பல்கலைக் கழகங்கள், தமிழகம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட  இந்தியாவின் 10
மாநிலங்களில் உள்ளன. இந்த பல்கலைக் கழகங்களில்இளநிலை, முதுநிலை, ஒருங்கிணைந்த மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. வெவ்வேறு மாநில மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன.இந்த படிப்புகளில் சேர்வதற்கு CUCET எனப்படும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு  நடத்தப்படுகிறது.இந்த நுழைவுத் தேர்வு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளwww.cucet2013.co.inஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி இணைய தளங்கள் உள்ளன.தமிழக மாணவர்கள்www.cutn.ac.inஎன்ற இணைய தளத்தையும், கேரள மாணவர்கள்www.cukerala.ac.inஎன்ற இணைய தளத்தையும் பார்க்கவும். கூடுதல் விவரங்களை 18603 450112 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம்.மத்திய பல்கலைக் கழகங்களில் பல்வேறு படிப்புகள்:இந்தியாவின் 10 மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில்பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை இப்போது பார்க்கலாம்.திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில், M.Sc. படிப்பு, Applied Quantitative Finance, Actuarial Economics, Environmental Economics, Financial Economics, General Economics ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இதே போல் தமிழ், English Studies ஆகிய பிரிவுகளில் முதுநிலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.இளநிலை மற்றும் முதுநிலை ஒருங்கிணைந்த படிப்புகளாக வேதியியல், பொருளாதாரம், உயிர் அறிவியல், கணிதம், இயற்பியல் ஆகிய படிப்புகள்வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் +2 முடித்தவர்கள் நேரடியாக சேர்ந்து படிக்கலாம்.Ph.D. படிப்பு ஆங்கிலப் பிரிவில் வழங்கப்படுகிறது. இவற்றைத்தவிர, வரும் கல்வியாண்டில் இருந்து, M.A. Social Work and Mental Health, Media and Communication மற்றும் வேதியியல், இயற்பியல் பிரிவுகளில் Ph.D. ஆகிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதே போல் 4 ஆண்டு கால அளவிலான ஒருங்கிணைந்த B.A. B.Ed., அல்லது B.Sc. B.Ed., படிப்புகளும் வரும் கல்வியாண்டில் இருந்து தொடங்கப்படுகின்றன.CUCET நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள்:மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர்வதற்கான CUCET நுழைவுத் தேர்வு குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.நுழைவுத் தேர்விற்கான விவரக் குறிப்புகள் www.cucet2013.co.inமற்றும் அந்தந்த மாநில மத்திய பல்கலைக் கழக இணைய தளங்களில் கிடைக்கும். விண்ணப்பங்களை மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் சேர்க்கை மையங்களில் நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 30-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இளநிலைப் படிப்புகளுக்கான தேர்வர்கள் தங்கள் தேர்வறை அனுமதிச் சீட்டை, மே 15-ஆம் தேதி இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அனுப்ப மே மாதம் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். முதுநிலைத் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வறை அனுமதிச் சீட்டை, ஜூன் 13-ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு மே 18, 19 ஆகிய தேதிகளிலும், முதுநிலை படிப்புகளுக்கு ஜூன் 15, 16 ஆகிய தேதிகளிலும், ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூலை 14-ஆம் தேதியும்  ஆன்லைன் தேர்வு நடைபெறும்.ஆஃப்லைன் தேர்வுகள் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளுக்குமே 19-ஆம் தேதியிலும், முதுநிலைக்கு ஜூன் 16-ஆம் தேதியிலும், ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூலை 14-ஆம் தேதியும் நடைபெறும். கூடுதல் விவரங்களை 18603 450112 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம்.

No comments:

Post a Comment