Sunday 21 July 2013

தரம் உயர்ந்த பள்ளிகளில் காலியிட விதிமுறை தளர்வு?



                             தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களை முழுவதுமாக நிரப்பும் நோக்கில், விதிமுறையில் ஒரு சில தளர்வு காட்டலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகம் முழுவதும்
உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, நேற்று சிறப்பு கவுன்சிலிங் நடந்தது. தரம் உயர்ந்த ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 5 முதல் 9 முதுகலை ஆசிரியர் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. அந்தந்த சி..., அலுவலகங்களில் நேற்று உள் மாவட்ட முதுகலை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்தது. சிவகங்கை உட்பட ஒரு சில மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் மட்டுமே மாறுதல் உத்தரவு பெற்றனர். இந்நிலையில்,நாளை (ஜூலை22)மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும், மாறுதல் கோரும் மாவட்ட சி..., அலுவலகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டத்தில் உள் மாவட்ட மாறுதலை சில ஆசிரியர்கள் விரும்பாததால்,தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது. பொதுமாறுதல் விதிமுறைகளை கடைபிடித்த போதிலும், தரம் உயர்ந்த பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பற்றாக்குறை தவிர்க்க,போட்டி இல்லாத இடங்களில் பணியில் சேர்ந்து, ஓராண்டு நிறைவு பெறாமல் இருந்தாலும்,தேவையின் அடிப்படையில் மாறுதல் பெற வாய்ப்பளிக்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment