Monday 22 July 2013

தலைமையின்றி தள்ளாடும் ஆதிதிராவிட நலப்பள்ளிகள்



              தமிழகம் முழுவதிலும் உள்ள, 26 ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித் தரம், பாதிக்கப்படும் அபாயம், உள்ளது. தமிழகத்தில்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 75 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 32,708 மாணவர்; 29,618 மாணவியர் என, மொத்தம், 62,326 பேர் படித்து வருகின்றனர்இதில், 26 மேல்நிலைப் பள்ளிகளில், ஓராண்டாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, ஆதிதிராவிட நலப்பள்ளிகள் குறித்து, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களே, தகவல்களை சேகரிக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் உள்ள எந்தெந்த பள்ளிகளில், எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; அவர்களில் எத்தனை பேர் தற்போது ஓய்வு பெற்றுள்ளனர்; அவர்களுக்கு அடுத்து, அந்த இடங்களில் யாரை பொறுப்பில் அமர்த்தலாம் என்பது குறித்த, எந்த தகவலும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களிடம் இல்லை என, கூறப்படுகிறது. அதுவே, பெரும்பாலான பிரச்னைகளுக்கு அடித்தளம் என்றும் கூறப்படுகிறது.
               
ஆதிதிராவிட நலப் பள்ளிகளில், தலைமையாசிரியர் பணியிடங்கள் குறித்த, ஒருமித்த அணுகுமுறையை, கல்வித் துறை, ஏன் இன்னமும் உருவாக்கவில்லை என்ற கேள்வி, தொடர்கதையாக இருக்கிறது. ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், இதில் ஈடுபாடு காட்டினால், ஆதிதிராவிட மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாமல் இருக்கும். இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "இந்த மாத இறுதிக்குள், காலியாக உள்ள பணியிடங்கள், உடனடியாக நிரப்பப்படும். அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன" என்றனர்

No comments:

Post a Comment