Saturday 6 July 2013

மாணவர் அழுது புலம்பியதால் கையெழுத்திட்ட இணை இயக்குனர்



                பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில், தேர்வுத் துறை அதிகாரியின் கையெழுத்தை பெற முடியாமல் போராடிய மாணவர், நேற்று இயக்குனர் அலுவலகம் முன் நின்று கதறினார். இதையடுத்து, சான்றிதழில், அதிகாரி,
கையெழுத்திட்டு கொடுத்தார். சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன். அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 2 முடித்தார். வேப்பேரி பகுதியில் உள்ள செங்கல்வராயன் பாலிடெக்னிக் கல்லூரியில், டி.எம்.., சேர விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த கல்லூரி அலுவலர்கள், மாணவரின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்வுத் துறை இணை இயக்குனரின் கையெழுத்து மற்றும், "சீல்" இல்லாததைக் கண்டு, அதை பெற்று வருமாறு மாணவரிடம் அறிவுறுத்தினர்.
                            
துறை அதிகாரியின் கையெழுத்தை பெற, பல நாட்களாக, மாணவர் அலைந்துள்ளார். பல்வேறு பணிகள் காரணமாக, சம்பந்தபட்ட இணை இயக்குனர் தங்கமாரி, அலுவலகத்தில் இல்லை என, கூறப்படுகிறது. இந்நிலையில், மதிப்பெண் சான்றிதழில், அதிகாரியின் கையெழுத்தை பெற முடியவில்லை எனில், பாலிடெக்னிக் கல்லூரியில் சேர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியே நின்றபடி, மணிகண்டன், அதிகாரியின் கையெழுத்து கேட்டு கதறினார். தகவல் அறிந்ததும், இணை இயக்குனர் விரைந்து வந்து, மதிப்பெண் சான்றிதழில் கையெழுத்திட்டு கொடுத்தார். கல்வித்துறையில், ஒவ்வொரு அதிகாரியும், இரண்டு பதவிகளை வகிக்கும் நிலை உள்ளது. இதனால், பணிப்பளு காரணமாக, அதிகாரிகளை அலுவலகத்தில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பினால், இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க முடியும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
.

No comments:

Post a Comment