Friday 5 July 2013

இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம்: பின்பற்றாத பள்ளிகள்



         மத்திய அரசு கொண்டுவந்த ஆர்.டி.., எனப்படும் "அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் இன்னும் இச்சட்டத்தில் உள்ள விதிகள்,
பள்ளிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இச்சட்டம், நாட்டில் உள்ள 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும், கட்டாய அடிப்படை கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. 2013 ஏப்., கணக்கின் படி, நாட்டில் உள்ள பள்ளிகளில், 11 சதவீத பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. 20 சதவீத பள்ளிகளில் குடிதண்ணீர் வசதி இல்லை. 74 சதவீத பள்ளிகளில் நூலகங்கள் கிடையாது என சி.ஆர்.ஒய்., என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் 13 மாநிலங்களில், 71 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த அமைப்பு, 34 ஆண்டுகளாக குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
                                
குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு ஆர்வமாக செல்ல வேண்டுமெனில் பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை, நூலகம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் அடிப்படை வசதிகளிலேயே குறைபாடு இருக்கும் போது, குழந்தைகளுக்கு தொடர்ந்து படிக்கும் ஆர்வம் இல்லாமல் போய் விடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது
.

No comments:

Post a Comment