Monday 15 July 2013

பள்ளிகளில் முதல் பருவ தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க வல்லுனர் குழு அமைப்பு



                 பள்ளிகளில் முதல் பருவ தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்க சிறப்பு ஆசிரியர்கள் கொண்ட குழுவை அரசு தேர்வுகள் இயக்ககம் அமைத்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு,
அரையாண்டு, மற்றும் திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரித்து கொடுப்பார்கள். தனியார் பள்ளிகளை பொறுத்தவரை அவர்களே தயாரித்து கொள்வது வழக்கம். தற்போது  சமச்சீர் கல்வி முறையும், முப்பருவ முறையும் நடைமுறையில் இருப்பதால் பருவ முறை தேர்வுகள் நடக்கின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மட்டுமே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் அச்சிட்டு வழங்கப்படும். பருவ தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை கடந்த ஆண்டு முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககமே வல்லுனர் குழுவை கொண்டு தயாரித்தது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் இந்த கேள்வித்தாளை கொண்டுதான் பருவமுறைத் தேர்வுகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 10 அல்லது 12ம் தேதியில் முதல் பருவ தேர்வு தொடங்க வேண்டும். அதனால் அதற்கான கேள்வித்தாள்களை வடிவமைக்கும் பணியை தேர்வுத் துறை இப்போதே தொடங்கவிட்டது. இதற்காக சிறப்பு ஆசிரியர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
                        
அந்த குழு 6ம் வகுப்பு முதல் பாட வாரியாக கேள்வித்தாள்களை வடிவமைக்க தொடங்கிவிட்டனர். இம்மாத இறுதியில் அந்த பணிகள் முடியும். செப்டம்பர் முதல் வாரத்தில்தான் கேள்வித்தாள் அச்சிடும் பணிகள் தொடங்கும். தேர்வுத் துறை அச்சிடுமா அல்லது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி மாவட்டங்களில் அச்சிடுவார்களா என்பது இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும். ஆண்டுத் தேர்வில் எந்த வடிவில் கேள்வித்தாள் இருக்குமோ அதே போலவே முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் ஆகிய  அனைத்து தேர்விலும் கேள்வித்தாள் இடம் பெறுகிறது. இதையடுத்து உயர்வகுப்பு செல்லும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கும்
.

No comments:

Post a Comment