Saturday 6 July 2013

தாய்மொழியில் துவக்க கல்வியா?



           எந்த மொழியில் அடிப்படை கல்வியை படிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை, கூடுதல் பெஞ்ச் விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டு உள்ளதுகர்நாடக மாநிலத்தில், அரசு அனுமதியுடன் செயல்படும்,
ஆனால், அரசு நிதியுதவி பெறாத துவக்கப் பள்ளிகளும், கன்னட மொழியைத் தான் மொழிப்பாடமாக கற்றுக் கொடுக்க வேண்டும் என, மாநில அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதியாக தேர்வாகியுள்ள, இன்னும் பொறுப்பேற்காத, சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்ததுஅப்போது, "இந்த வழக்கை, நாங்கள் விசாரிப்பதை விட, கூடுதல் பெஞ்ச் விசாரிப்பது தான் சரியானதாக இருக்கும்" என தெரிவித்த நீதிபதி சதாசிவம், வழக்கை, கூடுதல் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment