Thursday 4 July 2013

அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு



         கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத்துறை அரசு ஊழியர் சங்கங்களின் சார்பில் வருகின்ற 25.7.2013 அன்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டங்கள் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தை வெற்றிகர
மாக்குவதற்கான போராட்ட ஆயத்த மாநாடு புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. ஊதியக்குழு குறைதீர்க்கும் குழுவின் அறிக்கையை தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி விரைவாக வெளியிட வேண்டும். 50 சத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு ஊழியர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
                        
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி அனைத்துத் துறை அரச ஊழியர் சங்கங்களின் சார்பில் வருகின்ற 25.7.2013 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கான போராட்ட ஆயத்த மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டை நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு போராட்டக்குழுவின் மாவட்டக் கன்வீனர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.கோவிந்தசாமி சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி அனைத்துச் சங்க மாவட்ட நிர்வாகிகள் பேசினர். முன்னதாக அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமி வரவேற்க, பொருளாளர் எம்.ஜோஷி நன்றி கூறினார்
.

No comments:

Post a Comment