Wednesday 3 July 2013

புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்காததால் கற்பிப்பதில் சிக்கல் - Dinamalar



            தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அனைவருக்கும் புத்தகப்பை வழங்கப்பட்டும், புத்தகங்கள் முழு அளவில் வழங்கப்படவில்லை; புத்தகங்கள் பற்றாக்குறையாக வந்துள்ளதால், மாணவர்களுக்கு
பாடங்கள் கற்பிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. உடுமலை ஒன்றியம் மற்றும் நகரப்பகுதியில் 113 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி துவங்கியவுடன் விலையில்லா சீருடைகள், நோட்டு, காலணிகள், வண்ண பென்சில்கள் மற்றும் பேக் மற்றும் பள்ளிகளுக்கும் தலா ஒரு செஸ் போர்டும்; முதல் பருவத்திற்கான புத்தகங்களும் வழங்கப்பட்டன. இந்நிலையில், உடுமலை ஒன்றியம் மற்றும் நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சில தொடக்கப்பள்ளிகளில், சில வகுப்புகளை தவிர, மற்ற வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை; ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்கள் அனைவருக்கும் முறையாக கிடைக்காத நிலையில், பாடம் கற்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
                          
நடுநிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளுக்கும் புத்தகங்கள் பற்றாக்குறையாகவே உள்ளன. பாடபுத்தகங்களில் உள்ள பயிற்சிகள் மற்றும் குறிப்புகள் எடுக்க புத்தகங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. ஆனால் புத்தகங்கள் இல்லாததால், பயிற்சி அளிப்பதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சில பள்ளிகளில் கடந்தாண்டு மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதுள்ளது. பள்ளி துவங்கி ஒரு மாதம் ஆகியும் அரசுப்பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால், பாடங்களை கற்பிக்க முடியாமல் ஆசிரியர்களும், கற்க முடியாமல் மாணவர்களும் பரிதவித்து வருகின்றனர்.

செப்., மாதம் வரை, முதல் பருவ பாட புத்தகங்களை பயன்படுத்த முடியும் என்பதால், உடனடியாக புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் உள்ள பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டாலும் புத்தகங்கள் கிடைக்காததால், அந்த வகுப்பு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. புத்தகப்பை கிடைத்தும் புத்தகங்கள் கிடைக்காததால், மாணவர்கள், பெற்றோர் வேதனையடைந்துள்ளனர். பள்ளி துவங்கியதும் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விலையில்லா பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுத்த அரசு, அனைவருக்கும் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
.

No comments:

Post a Comment