இந்தியாவில் புதியதாக 20 மகளிர் பல்கலை, 800 கல்லூரிகள் துவங்கப்படும் என, கர்நாடகா மகளிர் பல்கலை துணைவேந்தர் மீனாராஜிவ் சந்தா வார்க்கர் பேசினார்.காரைக்குடி அழகப்பா பல்கலை மகளிரியல்
மையம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை மகளிரியல் மையம் இணைந்து நடத்தும் பெண்கள் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம், நேற்று காரைக்குடியில் துவங்கியது. பல்கலை துணைவேந்தர் சேது சுடலைமுத்து தலைமை வகித்தார் தெரசா பல்கலை துணைவேந்தர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.கர்நாடகா பிஜப்பூர் மகளிர் பல்கலை துணைவேந்தர் மீனாராஜீவ் சந்தாவார்க்கர் பேசியதாவது: பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தால் உயர்வை அடைய முடியும். 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 20 பெண்கள் பல்கலைகளும், 800 மகளிர் கல்லூரிகளும் நிறுவப்பட உள்ளன, என்றார்.ஹங்கேரி மத்திய ஐரோப்பிய பல்கலை பாலின கல்வித்துறை பேராசிரியர் ஆன்ட்ரியா பேசியதாவது: ஒதுக்கப்படுதல் இன்று சமுதாய பிரச்னையாக உள்ளது. ஒதுக்கப்படும் பெண்களுக்கு, பெண்களே போராடும் நிலை உள்ளது. இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர்.ஆண், பெண் வேறுபாடு, பொருளாதார, மத ரீதியாக வேறுபடுத்தப்படுகின்றனர். ஆண், பெண்களுக்கு ஒரே வேலை, ஆனால் இரண்டு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அரசியலில் சதவீத அடிப்படையில் மட்டுமே பெண்களுக்கு உரிமை உள்ளது. பாடத்திட்டங்களை உருவாக்குபவர்கள் ஆண்களே. அவர்களுக்கு சாதகமான வகையில் உருவாக்கப்படுகின்றன. இதனால், அறிவியல் துறையில் பெண்களுக்கு பின்னடைவாக உள்ளது. ஹங்கேரி நாட்டில், 9 சதவீத பெண்கள் மட்டுமே அரசியலில் பங்கேற்றுள்ளனர், என்றார்.அழகப்பா பல்கலை மகளிரியல் மைய இயக்குனர் (பொ) முருகன், தெரசா பல்கலை மகளிரியல் மைய இயக்குனர் ஹில்டா தேவி பங்கேற்றனர்
No comments:
Post a Comment