தனியார் பள்ளிகளில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி
தனியார் பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வசதிக்காக மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நாடு முழுவதும் மூன்று லட்சம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, 35 லட்சம் மாணவர்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கணக்கிட்டுள்ளது. இதற்காக 12வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் ரூ.3000 செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை மத்திய மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் இத்திட்டத்திற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment