Tuesday 15 October 2013

தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு "அட்வைஸ்'


                    "லோக்சபா தேர்தல் பணியை, புறக்கணிக்கக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதுஅதில், ஊழியரின் பெயர், வயது, இனம், மொபைல் எண், துறை, என்ன பதவியில், எந்த ஊரில் உள்ளார், சம்பள விகிதம், வீட்டு முகவரி, தாலுகா, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை நிரப்பி, புகைப்படம் ஒட்டி, துறைத்தலைவரிடம் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு அட்வைஸ்: "எந்த தேர்தல் என்றாலும், அதில் ஆசிரியர்களின் பணி மிக முக்கியமானதாகும்.

                         எனவே, தேவையற்ற காரணங்களைக்கூறி, லோக்சபா தேர்தல் பணியை புறக்கணிக்கக் கூடாது,' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. "ஜனநாயக கடமையான தேர்தல் பணியை செய்ய, அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி , பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலகத்தில், விரைந்து அளித்திடவும்' குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment