Saturday 5 October 2013

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு பயிற்சி



         மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிவியல் மற்றும் கணக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் ராஜேந்திரதார்தா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் பள்ளி மாணவர்களிடையே ஆங்கிலம்அறிவியல்கணிதம்ஆகிய பாடங்களில் மிகவும்
பின்தங்கியநிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளி்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான சாப்ட்வேர் தயாரிக்கும் பணியை அம்ரிதா பல்கலை மற்றும் பாம்பே இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோரின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மாநில அரசு 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன் முதல் நிலை மற்றும் இரண்டாம்நிலை ஆசிரியர்கள் சுமார் 87 ஆசிரியர்கள் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment