Tuesday 15 October 2013

எஸ்.சி, எஸ்.டி. மாணவிகளுக்கு ஊக்குவிப்புத் திட்டம்!


              அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும்ஆதிதிராவிட பழங்குடியின மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஊக்குவிப்புத் திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. 2013-2014ஆம் ஆண்டுபெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவிகளுக்கு வழங்கும் பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை 7-ஆம் வகுப்புமற்றும் 8-ஆம் வகுப்புக்கும் விரிவுப்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புப் பயிலும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவிகளுக்கு மாதம்ரூ. 150 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 1,500 வழங்கஅனுமதிக்கப் பட்டுள்ளது.

                       இத்திட்டத்தின் மூலம்பயன்பெற அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவியாளர் மூலம் பெண்கல்வி ஊக்குவிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம் மூலம் பெற்று, பூர்த்தி செய்து,மாணவியின் சாதிச்சான்று அல்லது வட்டாட்சியர் சான்று இணைத்து, திரும்ப அனுப்ப வேண்டும்.அனுமதிக்கப்படும் ஊக்கத்தொகை மாணவிகளின் பெயரில் உள்ளவங்கிக் கணக்கு அல்லதுமாணவியரின் தாய் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கு எண்ணில் செலுத்தப்படும். எனவே, மாணவியரின் பெயரில் வங்கிக் கணக்கு அல்லது மாணவியின் தாயின் பெயரில் அஞ்சலகக் கணக்கு துவக்கப்பட்டு, மேற்படி கணக்குஎண் விவரம் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத் திட அனைத்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment