Monday 8 July 2013

அரசியல் தொடர்புடைய ஆசிரியர் பெயரை விருதுக்கு பரிந்துரைக்க கூடாது : பள்ளிக்கல்வி இயக்குனர் கண்டிப்பு


              சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, செப்., 5ம் தேதி, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட உள்ளது. இதற்கு, வரும், 12ம் தேதிக்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.


                      12க்குள் விண்ணப்பம் : முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில், சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவிக்க, மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும், விருதுகளை வழங்கி, பாராட்டுகின்றன. தமிழகத்தில், 350 ஆசிரியர்களுக்கு, "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படுகிறது. விருதுடன், 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகின்றன. "இந்த விருது பெற, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், வரும், 12ம் தேதிக்குள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்துள்ளார்.
                                  
தகுதிகள் என்னென்ன? : தலைமை ஆசிரியர்கள், குறைந்தது, 20 ஆண்டுகளும், பிற ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், குறைந்தது, 15 ஆண்டுகளும் பணிபுரிந்திருக்க வேண்டும்.
=
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை, பரிந்துரை செய்யக் கூடாது.
=
பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள், எவ்வித குற்றச்சாட்டிற்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். பொது வாழ்வில் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
=
பள்ளியின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல் மற்றும் மாணவர் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், பாடுபட்டவராக இருக்க வேண்டும்.
=
கல்வியில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற, பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும்.
=
ஆதிதிராவிட, பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும், விருது பெற தகுதி உண்டு.
=
அரசியலில் பங்குபெற்று, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை, கண்டிப்பாக பரிந்துரை செய்யக் கூடாது. இவ்வாறு, இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்
.

No comments:

Post a Comment