Friday 5 July 2013

விலையில்லா புத்தகப்பை: ஆர்வம் காட்டாத மாணவர்கள் - நாளிதழ் செய்தி



                      அரசு வழங்கும் விலையில்லா புத்தகப்பை ஒரே நிறத்தில், வசதி குறைந்து காணப்படுகிறது. தவிர, முதல்வர் படமும் புத்தகப்பையில் இடம்பெற்றிருப்பதால், அவற்றை பயன்படுத்துவதில், பள்ளி மாணவர் மத்தியில் ஆர்வம்
குறைந்துள்ளது. தமிழக அரசு, அரசுப் பள்ளியில், மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தும் நோக்கில், பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு, புத்தகம், புத்தகப்பை, நோட்டு, காலணி, கலர் பென்சில், அட்லஸ்மேம்ப், லேப்டாப் உள்ளிட்ட, 14 வகையான பொருட்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. இது, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. எனினும், அரசின் ஒரு சில விலையில்லா பொருட்களை பயன்படுத்த, மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. குறிப்பாக, புத்தகப்பை போன்றவற்றை பயன்படுத்துவதில், மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
                      
அரசு வழங்கும் விலையில்லா புத்தகப் பையில், அதிக வசதியில்லை. தவிர, புத்தகப் பையில், முதல்வர் படம் இடம்பெற்றிருப்பது போன்ற பல்வேறு காரணத்தால், அவற்றை பயன்படுத்துவதில், மாணவர் மத்தியில் தயக்கம் நிலவுதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில், அரசு, மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றன. இவற்றை பெறுவதில், மாணவர்கள் மத்தியிலும் ஆர்வம் உள்ளது. எனினும், புத்தகப்பை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதில், மாணவர் மத்தியில் ஆர்வம் இல்லை. குறிப்பாக, நகர்ப்புற மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு வழங்கும் புத்தகப்பை பயன்படுத்துவதில்லை. இதற்கு, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் புத்தகப் பை பெரியதாவும், பல்வேறு வசதி, நிறம் மற்றும் டிசைன்களில் இருப்பது முக்கிய காரணமாகும். அதனால், அவற்றை மாணவர் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
                     
அதேவேளையில், அரசு வழங்கும் புத்தகப்பையில், வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பை போன்ற வசதிகள் எதுவும் இல்லை. தவிர, புத்தகப்பை அனைத்தும் ஒரே நிறத்தில் இருப்பதுடன், வெளிப்புறத்தில், கண்ணில்படும்படி முதல்வர் ஜெயலலிதா படம் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதும், மாணவர்களது ஆர்வமின்மைக்கு ஒரு காரணம். எனினும், உயர்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் மட்டுமே, அரசு வழங்கும் புத்தகப்பையை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்
.

No comments:

Post a Comment