ஆசிரியர்கள் சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெயராமன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–புதுவை மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து
நிலை ஆசிரியர் சங்கங்களும் இணைந்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இது சார்பில் பெண் ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் முழுமையான சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி தர ஒருகோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடக்கப்பட உள்ளது. புதுவையில் இதற்கான தொடக்க விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளியில் நடக்கிறது.
விழாவுக்கு கூட்டமைப்பின் அமைப்பாளர் பாலசந்தர் தலைமை தாங்குகிறார். விரிவுரையாளர் சங்க தலைவர் விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் கண்ணன், இடைநிலை ஆசிரியர் சங்க தலைவர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதல் அமைச்சர் ரங்கசாமி முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். அமைச்சர் தியாகராஜன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று ஆசிரியர் தினமான செப்டம்பர் 5–ந் தேதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment