Thursday 11 July 2013

நேரத்தில் உறங்காத பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது



                 இரவில் தமது பிள்ளைகள் நேரத்தோடு படுக்கைக்குச் செல்கிறார்களா என்பது பற்றி கவலைபடாத பெற்றோர்கள், தமது இளம்பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுவதற்கு இடமளித்துவிடுகிறார்கள் என புதிய
ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அடிக்கடி இரவு அதிக நேரம் வரை விழித்திருக்கின்ற மூன்று வயதுப் பிள்ளைகள் பிற்காலத்தில் கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உறக்கத்தின் அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல் வேகங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும், எளிதாக புதிய தரவுகளை கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன் பாதிக்கப்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
                              
பின்னேரம் வரையும், கண்ட கண்ட நேரங்களிலும் தூங்கச் செல்லும் வழக்கம் உடைய பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் இரவில் புத்தகம் வாசித்து உறங்கச் செய்வதற்கான வாய்ப்பும் குறைந்துபோய்விடுகிறது. தவிர அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் பிள்ளைகளே பொதுவாக பொழுதோடு உறங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என புதிய ஆய்வு காட்டுகிறது
.

No comments:

Post a Comment